search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிரட்டல் சாதனை
    X

    147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிரட்டல் சாதனை

    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    நாட்டிங்காம்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் -ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக பென் டக்கெட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். இவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து அசத்தியது.

    இதன் மூலம் 147 ஆண்டு கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எட்டிய அணி என்ற மாபெரும் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

    32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய பென் டக்கெட் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    Next Story
    ×