search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    காலில் விழுந்த ரசிகர் - ஜாலியாக விளையாடிய தோனி - வீடியோ வைரல்
    X

    காலில் விழுந்த ரசிகர் - ஜாலியாக விளையாடிய தோனி - வீடியோ வைரல்

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஊரில் விளையாடினாலும், சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தில் அதிக அளவில் கூடி விடுவார்கள்.
    • கடைசி ஓவரில் ரஷித் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாசி தள்ளினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ்வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்து தோனியின் காலில் விழுந்தது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஊரில் விளையாடினாலும், சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தில் அதிக அளவில் கூடி விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் தோனி.


    அதனால் தான் நேற்றைய போட்டியின் போதும் அகமதாபாத் மைதானத்தில் சென்னை ரசிகர்களே அதிகளவு காணப்பட்டனர். எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஜெர்சியுடன் விசில் அடித்து கொண்டு ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது சிவம் துபே 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, தோனி களம் இறங்கினார்.

    அப்போது தோனிக்காக ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது. இதன்பின் கடைசி ஓவரில் ரஷித் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாசி தள்ளினார். 3வது பந்து தோனியின் கால்களில் பட்டு செல்ல, குஜராத் அணி தரப்பில் டிஆர்எஸ் எடுக்கப்பட்டது.

    அதன்பின் டிஆர்எஸ்-ல் தோனி NOT OUT என்று வந்த போது, திடீரென மைதானத்தில் இருந்த தோனி கொஞ்சம் தூரம் ஓட தொடங்கினார். தோனி எதற்காக ஓடுகிறார் என்று புரியாததால் சில நிமிடங்கள் அனைவரும் இருந்தனர். அதன்பின்னர் தான் தெரிந்தது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி தோனியை நோக்கி ஓடி வந்தது. அப்படி ஓடி வந்த அந்த ரசிகர், தோனியின் காலில் விழுந்தார்.

    அதன்பின் பாதுகாப்பு காவலர்கள் அந்த ரசிகரை வெளியில் அழைத்து சென்றனர். எந்த ரசிகர் தோனியை நோக்கி ஓடி வந்தாலும், அவர்களுடன் ஒரு சிறிய விளையாட்டை தோனி விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அப்படித்தான் நேற்றைய போட்டியிலும் ரசிகர் ஒருவர் ஓடி வருவதை தெரிந்து கொஞ்சம் தூரம் ஓடி விளையாட்டு காட்டியுள்ளார் தல தோனி.


    Next Story
    ×