என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
நான் சிறப்பாக விளையாடுவதற்கு கம்பீர்தான் காரணம்- மனம் திறந்த சுனில் நரைன்
- நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
- இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.
இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.
இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்