search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதம் விளாசி பல்வேறு சாதனை படைத்த ஹாரி ப்ரூக்...டான் பிராட்மேனின் சாதனையும் சமன்
    X

    சதம் விளாசி பல்வேறு சாதனை படைத்த ஹாரி ப்ரூக்...டான் பிராட்மேனின் சாதனையும் சமன்

    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
    • ஹாரி ப்ரூக் 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லே (2) மற்றும் பென் டக்கர் (9) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த ஓலி போப் 10 ரன்களில் வெளியேறினார்.

    இதன்பின் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி, சிறப்பான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஹாரி ப்ரூக் இரண்டாவது போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

    ஹாரி ப்ரூக் 169 பந்துகளில் 184 ரன்களும், ஜோ ரூட் 182 பந்துகளில் 101 ரன்களும் எடுத்திருப்பதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் விளையாடியுள்ள 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ள ஹாரி ப்ரூக், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்துள்ளார்.

    அதே போல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் இந்திய வீரரான வினோத் காம்ப்ளே தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். அதே போல் முதல் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் ஹாரி ப்ரூக்கையே சாரும்.

    Next Story
    ×