search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தவறு என்று சொல்லல.. ஆனால் கேப்டன் பதவியை அவருக்கு கொடுத்திருக்கலாம்- டி வில்லியர்ஸ்
    X

    தவறு என்று சொல்லல.. ஆனால் கேப்டன் பதவியை அவருக்கு கொடுத்திருக்கலாம்- டி வில்லியர்ஸ்

    • சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
    • கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை.

    2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    Next Story
    ×