search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்... ஏபிடி வில்லியர்ஸ் எடுத்த அதிரடி முடிவு
    X

    ஏபிடி வில்லியர்ஸ் 

    ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்... ஏபிடி வில்லியர்ஸ் எடுத்த அதிரடி முடிவு

    • என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது.
    • ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்.

    சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓராண்டுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    ஐபிஎல் 2023 தொடருக்கு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு இணையப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ். ஆனால், அவர் வீரராக இணையப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

    சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்துக்குத் திரும்பும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்குத் தன்னுடைய ஆதரவைத் தரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

    சமூகதள உரையாடல் ஒன்றின் போது அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு நான் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு செல்லப் போகிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்.

    கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும். என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன். தான் அடுத்து தொடங்கப்போகும் யூடியூப் சேனல் பற்றி அறிவித்த டி வில்லியர்ஸ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

    இந்த உரையாடலின்போது இப்போதைக்குத் தான் பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய மகத்தான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த டி வில்லியர்ஸ் தற்போதைக்கு தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதே தன்னுடைய பிரதானம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே பகிர்ந்துகொள்ள நான் நிச்சயம் விரும்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் வரும். ஆனால் இப்போதைக்கு நான் எந்த அணியோடும் இணையத் தயாராக இல்லை. பயிற்சியாளரானால் மீண்டும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் மீண்டும் பயணம் மேற்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பல பயணங்கள் மேற்கொண்டுவிட்ட நான் இப்போதைக்கு சில காலம் என் குடும்பத்தோடு என் நேரத்தை செலவளிக்க நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

    ஐபிஎல் வரலாற்றில் முன்னணி வீரர்களில் ஒருவரான ஏபிடி வில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் 39.7 சராசரி மற்றும் 151 ஸ்டிரைக் ரேட்டுடன் 5,162 ரன்களை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவுக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி மூன்று வடிவங்களிலும் 18 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    Next Story
    ×