என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
எனக்கு அப்போ 7 வயசு இருக்கும்.. ரெய்னாவை சந்தித்த அனுபவம் பகிர்ந்த சமீர் ரிஸ்வி
- உத்திரபிரதேச இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது.
துபாயில் 17-வது சீசனுக்கான ஐபிஎல் 2024 ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது. இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர்களது வரிசையில் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.
பெரிய வீரர்களுக்கு மத்தியில் 20 வயதான உத்திரபிரதேச இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த வீரர் உள்ளூர் தொடரிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை ஏலம் எடுத்தது.
இந்நிலையில் சமீர் ரிஸ்வி எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் 12 ஆண்டுக்கு முன்னர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் நடப்பு ஆண்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2011-ம் ஆண்டு, எனக்கு 7-8 வயது இருக்கும் போது, ரெய்னா ரஞ்சி கோப்பை விளையாடிக் கொண்டிருந்தார். அந்த விளையாட்டில் நான் ஒரு பால்பாய். ரெய்னா பேட்டிங் செய்த போது, என்னை அவருக்கு பந்துவீச சொன்னார்.
மேலும் ஒரு இன்னிங்சுக்குப் பிறகு, அவர் ஸ்லிப் கேட்ச்சிங் பயிற்சி செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர் என்னை அழைத்து அவருடன் என்னையும் ஸ்லிப்பில் சேர்த்துவிட்டார். அங்கு நான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அவர் தனது சன்கிளாஸை எனக்கு பரிசளித்தார். அதுவே எனது முதல் சந்திப்பு.
இவ்வாறு ரிஸ்வி கூறினார்.