search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அன்றைக்கு இரவும் தூங்கவில்லை, இன்று இரவும் தூங்கமாட்டேன்: காரணம் சொன்ன ரஷித் கான்
    X

    அன்றைக்கு இரவும் தூங்கவில்லை, இன்று இரவும் தூங்கமாட்டேன்: காரணம் சொன்ன ரஷித் கான்

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ரேலியாவை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். குல்பதின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:

    இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்.

    இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது.

    எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×