search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டோனி உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால்... கம்பீர் சிரிக்க மாட்டாரு... - அஸ்வின்
    X

    டோனி உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால்... கம்பீர் சிரிக்க மாட்டாரு... - அஸ்வின்

    • ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன்.
    • இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல.

    தனது கிரிக்கெட் அனுபவங்கள் தொடர்பான 'I Have the Streets - குட்டி ஸ்டோரி' என்ற புத்தகத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.

    இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இந்திய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார்.

    அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பகிர்ர்த்து கொண்டார்.

    எம்.எஸ்.டோனி குறித்து பேசிய அஷ்வின், "ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன். சேலஞ்சர் டிராபி போட்டியில் போது நூலிழையில் டோனியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியாமல் போனது. இன்றும் அந்த பால் எனக்கு நினைவில் உள்ளது. அனால் அப்போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் நான் டைவ் அடித்து டோனியின் கேட்சை பிடித்து கொண்டாடினேன்.

    டோனி ஒருமுறை உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால் நீங்களே சோர்வடையும் வரை உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்" என்று தெரிவித்தார்.

    கவுதம் கம்பீர் குறித்து பேசிய அஷ்வின், "அவர் போராட்ட குணம் கொண்டவர். சில பேர் சிரிக்க மாட்டாங்க அவ்வளவுதான்.. அதுக்காக என்ன பண்ண முடியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    "இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல" என்று அஷ்வின் தெரிவித்தார்.

    Next Story
    ×