search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா அபாரம்: முதல் நாளில் இந்தியா 525 ரன்கள் குவிப்பு
    X

    ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா அபாரம்: முதல் நாளில் இந்தியா 525 ரன்கள் குவிப்பு

    • டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 525 ரன்கள் குவித்தது.
    • தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்து, 205 ரன்னில் அவுட்டானார்.

    சென்னை:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    Next Story
    ×