search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜிம்பாம்பேவை வீழ்த்தி 4 - 1 என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது
    X

    ஜிம்பாம்பேவை வீழ்த்தி 4 - 1 என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது

    • 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.
    • 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    Next Story
    ×