என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பும்ரா அசத்தல் பந்துவீச்சு: இந்தியா வெற்றி பெற 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்