search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
    X

    ஹர்திக் பாண்ட்யா

    முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

    • சிறந்த அணியாக செயல்படவே விருப்பம் என ஹர்திக் பாண்ட்யா தகவல்.
    • கிரிக்கெட் போன்ற விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல், அவேஷ் கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணியும் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க விரும்புகிறோம், ஆனால் சிறந்த 11 வீரர்களுடன் விளையாட விரும்புகிறோம். எங்களிடம் சிறந்த லெவன் அணி இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

    நான் யார் என்பதை காட்ட இங்கு வரவில்லை, இந்தியாவை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே எனக்கு பெரிய விஷயம். நான் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்துவேன். இந்தத் தொடரில் நான் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

    முன்பை விடஇப்போது அதிக பொறுப்பு. நான் பொறுப்பை ஏற்கும்போது சிறப்பாக செயல்பட்டேன் என்றே நான் எப்போதும் நம்பினேன். கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    தோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து அணியை வழி நடத்துவது குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அதே நேரத்தில், நான் நானாக இருக்க விரும்புகிறேன், எந்த நேரத்தில், அணிக்கு என்ன முடிவு தேவை என்பதில் கவனம் செலுத்துகிறேன்

    Next Story
    ×