search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐசிசி ஒருநாள் அணி தரவரிசை- இந்திய அணி முன்னேற்றம்
    X

    ஐசிசி ஒருநாள் அணி தரவரிசை- இந்திய அணி முன்னேற்றம்

    • நியூசிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • நியூசிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இந்தியா.

    ஐசிசி ஒருநாள் அணி தரவரிசையில் இந்திய அணி 105 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 108 ரேட்டிங் புள்ளிகளுக்கு உயர்த்தியது. இதனால் ஒருநாள் அணி தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    நியூசிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் இந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தனது முன்னிலையை மேலும் நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மாறாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால் இந்தியா மறுபடியும் நான்காவது இடத்திற்கு தள்ளப்படலாம்.

    பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் நெதர்லாந்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பாபர் ஆசமின் தலமையில் பாகிஸ்தான் அணி மூன்று 50 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×