என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்: வாசிம் ஜாபர்
- ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான்.
- 3-வது போட்டியிலும் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மும்பை:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வேகத்தில் இந்த தொடரில் இரண்டு முறையும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார்.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாம் இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் விக்கெட் இழந்த விதத்தை பார்த்து அவர் மீது அனுதாபம் கொண்டிருக்கலாம். மணிக்கு 145+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இடது கை பந்துவீச்சாளரான ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான். அதில் சந்தேகம் இல்லை. அவர் ஸ்டம்பை அட்டாக் செய்ய பார்ப்பார். அது தெரிந்ததுதான். ஆனால், மீண்டும் சூர்யகுமார் அதனை எதிர்கொண்ட போது அதற்கு தயார் நிலையில் வந்திருக்க வேண்டும்.
3-வது போட்டியில் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அது நிச்சயம் தவறான ஆப்ஷனாக அமையாது. அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.