search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முகமது சமி இல்லாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பு: தினேஷ் கார்த்திக்
    X

    முகமது சமி இல்லாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பு: தினேஷ் கார்த்திக்

    • சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது.
    • முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார்.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3-ம் நாள் உணவு இடைவெளி வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது சமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.

    முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

    இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.

    ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது.

    என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×