search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நான் பும்ராவிற்கு மாற்று வீரர்: இங்கிலாந்தின் டாப் 3 வீரர்களை கழற்றிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப்
    X

    நான் பும்ராவிற்கு மாற்று வீரர்: இங்கிலாந்தின் டாப் 3 வீரர்களை கழற்றிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப்

    • கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால், நோ-பால் என்பதால் தப்பினார்.
    • பின்னர் கிராலியை இன்-ஸ்விங் மூலம் மீண்டும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பும்ராவிற்குப் பதிலாக முகேஷ் குமார் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் 27 வயதான ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரரா? என கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் வியப்படைந்தனர்.

    ஆனால், பும்ரா அணிக்கு எவ்வாறு பங்களிப்பாரோ, அதேபோல் தானும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன் ஆகாஷ் தீப் களம் இறங்கினார்.

    முதல் ஓவரை சிராஜ் வீச, 2-வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். சுமார் 135 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார். இதனால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

    தனது 2-வது ஓவரிலேயே கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால், அது நோ-பாலாக அமைந்தது.

    இருந்தாலும் மனம் தளராமல் உத்வேகத்துடன் பந்து வீசினார். இதற்கு அவரின் 5-வது ஓவரில் பலன் கிடைத்தது. இந்த ஓவரின் 2-வது பந்தில் டக்கெட்டை (11) வெளியேற்றினார்.

    இதே ஓவரின் 3-வது பந்தில் ஒல்லி போப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு உத்வேகம் அளித்தார். அதோடு நிற்காமல் நோ-பால் மூலம் தப்பிய கிராலியை (42) அடுத்த ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீ்ன் போல்டு மூலம் வெளியேற்றினார். 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    27 வயதாகும் ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 30 முதல்தர போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 423 ரன்கள் எடுத்துள்ளார்.

    Next Story
    ×