search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தரம்சாலா டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது
    X

    தரம்சாலா டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது

    • இன்றைய ஆட்டத்தில் இந்தியா 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
    • இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது.

    குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குல்தீப் யாதவ் மேலும் 3 ரன்கள் அடித்து 30 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பும்ரா 20 ரன்னில் ஸ்டம்பிங் ஆக இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×