search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    இங்கிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

    • கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை.
    • சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவர் இடத்தில் சோயிப் பஷீர் இடம் பெறலாம்.

    விசாகப்பட்டினம்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. ஏற்கனவே விராட் கோலி முதல் 2 டெஸ்டில் விளை யாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அணி பலவீனத்துடன் காணப்படுகிறது.

    இந்திய அணியில் சர்பிராஸ்கான் அல்லது ரஜத்படிதார் டெஸ்டில் அறிமுகமாகலாம். ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார். மேலும் வேகப்பந்தில் மாற்றம் செய்யப்படலாம். ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில் இந்த டெஸ்ட்டில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கடந்த டெஸ்டில் அந்த அணியின் வெற்றிக்கு ஆலிபோப், டாம் ஹார்ட்லே முக்கிய பங்கு வகித்தனர்.

    சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவர் இடத்தில் சோயிப் பஷீர் இடம் பெறலாம்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 133-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 132 டெஸ்டில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி 'டிரா' ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×