என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 215 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இந்திய அணி 40.4 ஓவரில் 220 ரன்கள் எடுத்து வென்றது.
பெங்களூரு:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 25 ரன், பிரியா புனியா 28 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி 40.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.