என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சேப்பாக்கம் மைதானத்தை அதிர வைத்த கான்வே- சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ரன்கள் குவிப்பு
- அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 92 ரன்கள் விளாசினார்.
- 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்கள், ஷிவம் துபே 28 ரன்கள், மொயீன் அலி 10 ரன்கள், ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் டோனி தனக்கே உரித்தான பாணியில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் 4 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 13 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ராகுல் சாகர், சிக்கந்தர் ரசா, சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.






