search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக ஜடேஜா படைத்த சாதனை
    X

    ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக ஜடேஜா படைத்த சாதனை

    • ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து தசுன் சனகா மற்றும் டேவிட் மில்லர் என 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
    • அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 22 (16) ரன்கள் எடுத்தார்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் போராடி 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 60 ரன்களும் டேவோன் கான்வே 40 ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து 20 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹார், பதிரனா, தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதிலும் குறிப்பாக 4 ஓவரில் வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து தசுன் சனாகா மற்றும் டேவிட் மில்லர் என 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 22 (16) ரன்கள் எடுத்தார். அவர் இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் 175 ரன்களை எடுத்துள்ளார். பந்து வீச்சில் 19 விக்கெட்களை எடுத்து மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக அசத்தியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்களை எடுத்த முதல் இடதுகை பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

    குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஒரு ஸ்பின்னராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. ரவீந்திர ஜடேஜா : 151*

    2. அக்சர் படேல் : 112

    3. ஆஷிஷ் நெஹ்ரா : 106

    4. ட்ரெண்ட் போல்ட் : 105

    5. ஜாகிர் கான் : 102

    அத்துடன் 2267 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 1000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக இருக்கிறார். அந்த பட்டியலில் ப்ராவோ (1560- 183), சுனில் நரேன் (1046 - 163) ஆகியோருக்கு பின் 3-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

    Next Story
    ×