search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இம்பேக்ட் பிளேயர் விதி டோனியை நீண்ட நாட்கள் விளையாட வைக்கும்- பிராவோ
    X

    இம்பேக்ட் பிளேயர் விதி டோனியை நீண்ட நாட்கள் விளையாட வைக்கும்- பிராவோ

    • டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார்.
    • கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து டோனி கூறுகையில், மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்.

    விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், டோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×