search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பிளே ஆப் சுற்றில் 3 பேர் ரன் அவுட்.. ஐபிஎல் தொடரில் 2-வது முறையாக நடந்த சம்பவம்
    X

    பிளே ஆப் சுற்றில் 3 பேர் ரன் அவுட்.. ஐபிஎல் தொடரில் 2-வது முறையாக நடந்த சம்பவம்

    • நேற்றைய போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
    • பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும்.

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது போட்ட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

    இதன்மூலம் பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் ஆனது. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    கேமரூன் கிரீன் வீசிய 12-வது ஓவரின் 5-வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2-வது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

    இதே போல பியூஷ் சாவ்லா வீசிய 3-வது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் கிரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா ரன் அவுட் செய்தார்.

    இந்த 2 பேரையும் ரன் அவுட்டாக்கிவிட்டதாக கருதப்படும் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், கிரீன் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 3 ரன் அவுட் லக்னோ அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2-வது முறையாக லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியுள்ளது.

    Next Story
    ×