என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? டெல்லியுடன் நாளை மோதல்
- பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற நாளைய ஆட்டத்தில் சென்னை அணி வெல்ல வேண்டியது அவசியம்.
- தோல்வி அடைந்தால் மற்ற அணி ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
புதுடெல்லி:
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. ஐதராபாத், டெல்லி ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
பிளே-ஆப்பில் மூன்று இடங்களுக்கு 7 அணிகள் இடையே போட்டி உள்ளது. 70 லீக் ஆட்டங்களில் இதுவரை 65 போட்டி முடிவடைந்துள்ளது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நாளை மதியம் 3.30 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.
பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற நாளைய ஆட்டத்தில் சென்னை அணி வெல்ல வேண்டியது அவசியம். தோல்வி அடைந்தால் மற்ற அணி ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
ஒருவேளை சென்னை அணி தோற்று லக்னோ, பெங்களூர், மும்பை ஆகிய அணி தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் சென்னை அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும்.
சென்னை அணி மோதும் போட்டிக்கு பிறகுதான் மற்ற அணிகள் (லக்னோ, மும்பை, பெங்களூரு) ஆட்டங்கள் நடக்கிறது. எனவே நாளைய ஆட்டத்தில் சென்னை அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டியது அவசியம்.
சென்னை அணி பேட் டிங்கில் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாகர், பதிரனா, தேஷ்பாண்டே, ஜடேஜா, தீக்சனா ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சென்னையின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. சென்னை அணியின் பேட்டிங் பலம் வாய்ந்து காணப்படுகிறது. ஆனால் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
இவ்விரு அணிகள் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
டெல்லி அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 13 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று உள்ளது.
டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும். மேலும் முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க போராடும்.
டெல்லி அணியில் டேவிட் வார்னர், ரூசோவ், மணீஷ் பாண்டே, பிலிப் சால்ட், அக்சர் பட்டேல், இஷாந்தி சர்மா, குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்