என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா: குஜராத்துக்கு புதிய கேப்டன் அறிவிப்பு
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது.
- ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை குஜராத் அணி எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்த பதிவில் உங்கள் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்ட்யா என தெரிவித்திருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார்.
??????? ???? ?#AavaDe pic.twitter.com/tCizo2Wt2b
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023
Farewell and best wishes on your next journey. Go well, HP! #IPLRetention pic.twitter.com/awCxZzXesc
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023