search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கம்மின்ஸ் வருகை ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- சுனில் கவாஸ்கர்
    X

    கம்மின்ஸ் வருகை ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- சுனில் கவாஸ்கர்

    • கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சில் குழப்பமாக இருந்தது.
    • அவரது வருகையால் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்த குறைபாடு நீங்கும்.

    புதுடெல்லி:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான ஏலத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை ரூ. 20½ கோடிக்கு வாங்கியது. இதனால் இந்த சீசனில் ஐதராபாத் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஏலத்தில் ஐதராபாத் அணி கம்மின்சை வாங்கியதை புத்திசாலித்தனமான முடிவாக நான் பார்க்கிறேன். அவர் கொஞ்சம் அதிக விலைக்கு வாங்கப்பட்டு இருந்தாலும், அவரது வருகையால் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்த குறைபாடு நீங்கும்.

    கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சில் குழப்பமாக இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் சில ஆட்டங்களில் தோல்வியை தழுவினர். தற்போது கம்மின்ஸ் ஐதராபாத் அணியில் இணைவதால் அவர் நிச்சயம் கேப்டனாக நியமிக்கப்படுவார். அத்துடன் அவரது வருகை அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.

    Next Story
    ×