search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐ.பி.எல். 2024: முடங்கிய வலைதளம்.. டிக்கெட் கிடைக்காமல் கடுப்பான RCB ஃபேன்ஸ்
    X

    ஐ.பி.எல். 2024: முடங்கிய வலைதளம்.. டிக்கெட் கிடைக்காமல் கடுப்பான RCB ஃபேன்ஸ்

    • பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது.
    • ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு இப்போதே தட்டுப்பாடு சூழல் உருவாக துவங்கியது.

    சமீபத்தில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியது.

    எனினும், முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் வலைதளம் அதிக பயனர்கள் டிக்கெட் எடுக்க முயற்சித்த காரணத்தால் முடங்கியது. இதன் காரணமாக ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர்.

    ஆர்.சி.பி. அணி பெங்களூருவில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 2 ஆயிரத்து 300-இல் இருந்து துவங்குகிறது. டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை ரூ. 42 ஆயிரத்து 350 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட் விற்பனை துவங்கியதுமே, அதனை வாங்க சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் 17 நாட்களுக்கான போட்டிகளின் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×