search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த அயர்லாந்து
    X

    சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த அயர்லாந்து

    • அயர்லாந்து பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்டில் விளையாடியது.
    • இதில் அயர்லாந்து சிறப்பாக செயல்பட்டு டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    பெல்பாஸ்ட்:

    அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்கள் எடுத்தார்.

    ஜாய்லார்டு கும்பி 49 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 35 ரன்னும் எடுத்தனர்.

    அயர்லாந்து சார்பில் பாரி மெக்கார்த்தி, ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் மூர் 79 ரன் சேர்த்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் முசராபானி, தனகா சிவாங்கா தலா 3 விக்கெட்டும், சடாரா, சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் ஆல் அவுட்டானது.

    டியான் மீயர்ஸ் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். சீன் வில்லியம்ஸ் 40 ரன்கள் சேர்த்தார்.

    அயர்லாந்து சார்பில் ஆண்டி மெக்பிரைன் 4 விக்கெட்டும், மார்க் அடைர், கிரெய்க் யங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. 3-வது நாள் முடிவில் அயர்லாந்து 33 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

    6வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில் டக்கர் 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், அயர்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆண்டி மெக்பிரின் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் அயர்லாந்து அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ஆண்டி மெக்பிரினுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×