என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு இவர் சரியாக இருப்பார்.. வாசிம் அக்ரம் சொல்வது என்ன?
- இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
- பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் கீடா நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் பேசுகையில், கம்பீர் எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் அதே நேரம், அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசக்கூடியவர், எதையும் இருமுறை யோசிக்காமல் பேசுவார்.
இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு குணமாகும். சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் இருப்பார், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அவர் சிறந்தவராக இருப்பார். அவர் இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பது குறித்தும் வாசிம் அக்ரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பபேட்டியில் அவர், நானும் வேறு சில பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.
ஆசிஷ் நெஹ்ராவை சுற்றியிருக்க அனைவரும் விரும்புவர். மேலும் லக்ஷ்மன் சிறந்த மனிதர். அவர் என்சிஏ தலைவர், 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.