search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அவுட் ஆக சொல்லி கோஷமிட்டது குறித்து ஜடேஜா புகார்? சி.எஸ்.கே. தலைமை நிர்வாகியின் புதிய தகவல்
    X

    அவுட் ஆக சொல்லி கோஷமிட்டது குறித்து ஜடேஜா புகார்? சி.எஸ்.கே. தலைமை நிர்வாகியின் புதிய தகவல்

    • டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன்.
    • ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சமன் செய்தது.

    சி.எஸ்.கே. கோப்பையை வெல்ல ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். அவர் கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்தார்.

    15-வது ஐ.பி.எல். சீச னில் ஜடேஜா கேப்டனாக இருக்க டோனி தானாகவே வழிவிட்டார். நடுவில் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். இதுதொடர்பாக ஜடேஜாவுக்கும், சி.எஸ்.கே. நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த சீசனில் டோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் டோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டதால் அவர் வருத்தம் அடைந்தார். டுவிட்டர் பக்கத்தில் இதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்து உள்ளார். டோனி மீது ஜடேஜா எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜடேஜாவை பொறுத்தவரை அவர் மிக சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங்கில் முன்னனி பேட்ஸ்மேன்கள் விளையாடி முடிக்கும்போது அவருக்கு குறைந்த பந்துகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருந்தது.

    ஜடேஜாவுக்கு அடுத்து டோனி வருவார் என்று அவருக்கு தெரியும். ரசிகர்கள் டோனி மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை வைத்து இருக்கலாம். இது ஜடேஜாவை புண்படுத்தி இருக்கலாம். இதுகுறித்து அவர் டுவிட் செய்து இருந்தாலும் கூட எங்களிடம் எதையும் புகாராக தெரிவிக்கவில்லை.

    டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன். வழக்கமான விஷயங்கள் தான் பேசினோம். தனிப்பட்ட முறையில் அங்கு எதுவும் பேசவில்லை.

    ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஐ.பி.எல். கோப்பை வெற்றியை டோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறியதில் இருந்தே நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×