என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கர்நாடகா அணிக்காக விளையாடி விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்ச்சர்: வீடியோ
- சசெக்ஸ் கவுன்ட்டி அணிக்காக ஜாஃப்ரா ஆர்ச்சர் விளையாடி வருகிறார்.
- சசெக்ஸ் அணி கர்நாடகா அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சசெக்ஸ் அணி தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆளுரில் 10 நாட்கள் பயிற்சிக்காக வந்துள்ளது.
கர்நாடகா அணிக்கு எதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் சசெக்ஸ் விளையாடியது. கர்நாடகா அணியில் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை இடம் பிடித்திருந்தனர்.
சசெக்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்து வீசவில்லை. 2-வது நாள் ஆட்டத்தின்போது கர்நாடகா அணியில் மாற்று (substitute) வீரராக களம் இறங்கினார். அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.
Wicket - Alsop out lbw, b ArcherThe KSCA XI's newest addition looks like a decent player tbf. ? pic.twitter.com/KXOTr6AgRI
— Sussex Cricket (@SussexCCC) March 15, 2024
பந்து வீசிய ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்.பி.டபிள்யூ. மூலம் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். 2-வது விக்கெட்டாக சக அணி வீரரை க்ளீன் போல்டாக்கினார்.
Jofra's taken another wicket and broken the stump! ? pic.twitter.com/9L7X2u4PEt
— Sussex Cricket (@SussexCCC) March 15, 2024
காயம் காரணமாக ஜாஃப்ரா ஆர்ச்சர் கடந்த 12 மாதங்களாக போட்டி கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக கடந்த சீசனில் மிகப்பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால் இந்த சீசனில் அவரை மும்பை அணி ரிலீஸ் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கை காயத்தால் ஜாஃப்ரா ஆர்ச்சர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.