என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சரியான முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ: கபில் தேவ் கருத்து
- முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
- சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன்.
2023 -24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள அந்த பட்டியலை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் விளையாட வேண்டும். அது நாட்டுக்கு நல்லது. நாட்டிற்கு எது நல்லதோ, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம், சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை அப்படியே விடுங்கள். ஏனெனில் இங்கே நம் நாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த வலுவான நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பாடத்தை கொடுக்கும். இது உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் நேரம் இருக்கும் போது தங்களுடைய மாநிலத்திற்கு விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது தங்களுடைய மாநில இளம் வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும் அது உங்களை சர்வதேச வீரராக உருவாக்க மாநில கிரிக்கெட் வாரியம் ஆற்றிய சேவைகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்துவதற்கான வழியாகவும் அமைகிறது.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்