என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்- சிராஜ்க்கு ஓய்வு?
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்- சிராஜ்க்கு ஓய்வு?

    • இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
    • சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.

    அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கான பிஸியான அட்டவணையைக் கருத்தில் கொண்டு சிராஜ்க்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    Next Story
    ×