என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகமான கேமரா கோணங்கள்: கில் விவகாரத்தில் ஐ.சி.சி.-யை சாடிய ரோகித் சர்மா
- கில் 2-வது இன்னிங்சில் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
- இந்தியா 234 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்தார். அப்போது அவர் பந்தை கீழே வைத்ததுபோல் தெரிந்தது.
இதனால் மைதான நடுவர்கள் 3-வது நடுவரின் உதவியை நாடினர். அவர் கேமராவின் ஒருசில கோணங்களை மட்டுமே ஆராய்ந்து விக்கெட் கொடுத்துவிட்டார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கேமரூன் க்ரீன் மோசடி செய்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முக்கியமான போட்டியில் ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்து அதன்பின் அவுட் கொடுக்க வேண்டும். ஆனால், நடுவர் உடனடியாக அவுட் கொடுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஐ.பி.எல். தொடரில் 10-க்கும் மேற்பட்ட கேமரா கோணங்கள் உள்ளன என ஐ.சி.சி.-யை மறைமுகமாக சாடினார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ''போதுமான அளவிற்கு நடுவர்கள் பல கோணங்களில் சரிபார்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக உணர்கிறேன். 3-வது நடுவம் இன்னும் அதிகமாக ரீபிளே செய்து கேட்ச் எவ்வாறு பிடிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டும்.
மூன்று அல்லது நான்கு முறை அவர் ரீபிளே செய்து பார்த்திருந்தால், கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பந்து தரையில் பட்டதா? என்பது குறித்து திருப்பதி அடையும் வகையில் முடிவு எடுத்திருக்க முடியும்.
அது அவுட்டா? இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. எல்லாவற்றிலும் சரியான மற்றும் தெளிவான வகையில் இருக்க வேண்டியது அவசியம். கேட்ச் மட்டுமல்ல. அனைத்து விசயத்திற்கும் இது அடங்கும். விரைவாக 3-வது நடுவர் விக்கெட் வழங்கியது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.
முக்கியமான போட்டி என்பதால் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு 100 சதவீதம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கேமரா கோணங்கள் காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கேமரா கோணங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் நாங்கள் அதிகப்படியான கேமரா கோணங்களை காட்டியுள்ளோம். 10 விதமான கேமரா கோணங்கள் ஐ.பி.எல். தொடரில் காண்பிக்கப்பட்டது.
மிகப்பெரிய தொடரில் ஏன் இதுபோன்று காண்பிக்கவில்லை, அல்ட்ரா மோசன் மற்றும் குறிப்பிட்ட இடத்தை பெரிதாக காட்டும் ஜூம் போன்றவை குறித்து ஏமாற்றம் அடைகிறேன்'' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்