search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 2-வது இடம் பிடித்து மந்தனா சாதனை
    X

    டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 2-வது இடம் பிடித்து மந்தனா சாதனை

    • முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார்.
    • கவூர் 3415 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

    இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஷபாளி வர்மா 26 ரன்னிலும் மந்தனா 55 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 55 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) மற்றும் கவூர் (3415) ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×