search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ். டோனி
    X

    மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ். டோனி

    • நடிகர் சல்மான் கான் எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் எம்.எஸ். டோனிக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.


    இதைத் தொடர்ந்து டோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு கேக் ஊட்டிவிட்டு, அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இதேபோன்று சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எம்.எஸ். டோனிக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×