என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/01/15/2002127-msdhoni.webp)
X
ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு
By
மாலை மலர்15 Jan 2024 7:44 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்பு.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X