என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
குஜராத் தோல்விக்கு காரணம் நெஹ்ரா தான்- நெட்டிசன்கள் விமர்சனம்
- இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
- தொடர்ந்து 4 பந்துகள் மோகித் சர்மா யார்க்கராக வீசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடின இலக்கை துரத்தியது. முதல் ஓவரிலயே மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோகித் சர்மா வீசினார். தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கராக வீசினார். 5-வது பந்தில் அவருக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா. அந்தப் பந்தில் ஜடேஜா சிக்சர் விளாசிவிட்டார்.
இறுதியாக கடைசி பந்தை லெக் சைடில் கொஞ்சம் வைடாக வீசிவிட்டார். இதனை எளிதாக தட்டி விடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் நன்றாக பந்து வீசிய மோகித் சர்மாவை குழப்பத்தில் ஆழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்பதற்கு ஆசிஷ் நெஹ்ராவே காரணமாக அமைந்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.