search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டம்: மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து 111/3
    X

    ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டம்: மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து 111/3

    • ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 164 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீனின் பொறுப்பான சதத்தால் 383 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்களில் ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 71 ரன்னும், மேட் ஹென்றி 42 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 2வது இன்னிங்சில் 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நாதன் லயன் 41 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி வெற்றிபெற 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்சில களமிறங்கிய நியூசிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 56 ரன்னுடனும், டேரில் மிட்செல் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றிபெற 258 ரன்கள் தேவை என்பதால் உள்ளூர் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    Next Story
    ×