என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மயங்க் யாதவ் பந்து வீச்சை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்- ஸ்டீவ் சுமித்
- மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும்.
- 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டெயின் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நான் இதுவரை பார்த்ததில் மயங்க் யாதவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை வீசுகிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்.
மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.
மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்.
இவ்வாறு ஸ்மித் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்