search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது நடுவர் கொடுத்த அவுட்: ரிவ்யூவ் கேட்ட சாம்சனுக்கு அபராதம்- ரசிகர்கள் கண்டனம்
    X

    3வது நடுவர் கொடுத்த அவுட்: ரிவ்யூவ் கேட்ட சாம்சனுக்கு அபராதம்- ரசிகர்கள் கண்டனம்

    • சாம்சன் அதிரடி வீண்- 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி.
    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 4, பட்லர் 19, 27 என விக்கெட்டுகளை இழந்தது. அந்த சமயத்தில் தனி ஆளாக சாம்சன் போராடி வந்தார்.

    இந்நிலையில் சாம்சன் ஒரு பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது சிக்சர் லைனில் இருந்த ஹோப் பந்தை பிடித்து எல்லை கோட்டிற்கு அருகில் சென்று பின்னர் உள்ளே வருவார். அப்போது அவரது கால் எல்லை கோட்டை தொடுவது போல காட்சி தெரியும். உடனே இதனை பார்த்த சாம்சன் களத்தில் உள்ள நடுவரிடம் ரீவ்யூ கேட்டு முறையிடுவார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கள நடுவர்கள் கூறினர்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில், ஒரு வேளை சஞ்சு சாமிற்கு அவுட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு அவுட் கொடுத்தது குறித்து களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×