search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    Pakistan team
    X

    மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்

    • முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 103 ரன்கள் அடித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான், யு.ஏ.இ. அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, யு.ஏ.இ. அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தீர்த்தா 40 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால், சந்து மற்றும் துபா ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    குல் பெரோசா 62 ரன்னும், முனீபா அலி 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    Next Story
    ×