search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2024 டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட் ட்ரிக் எடுத்த பேட் கம்மின்ஸ் - வீடியோ
    X

    2024 டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட் ட்ரிக் எடுத்த பேட் கம்மின்ஸ் - வீடியோ

    • ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • கேப்டன் நஜ்முல் 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.

    Next Story
    ×