search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    குல்தீப் யாதவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த அஸ்வின்: வைரலாகும் வீடியோ
    X

    குல்தீப் யாதவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த அஸ்வின்: வைரலாகும் வீடியோ

    • குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அஸ்வின் தனது 100-வது போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் மிரட்டினர். இருவரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது.

    குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மேலும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் இருந்து வெளியே வந்தனர். பொதுவாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பந்தை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி தூக்கி காண்பித்தவாற வெளியேறுவார்கள். அவரை சக வீரர்கள் கைத்தட்டி பாராட்டு பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    அதன்படி குல்தீப் யாதவ் வெளியே வர வேண்டும். ஆனால் இது அஸ்வினுக்கு 100-வது போட்டி என்பதால், நீங்கள் பந்தை தூக்கி காண்பித்து வெளியேறுங்கள் என அஸ்வினுக்கு அன்பு கட்டளையிட்டார். அத்துடன் பந்தை அஸ்வினிடம் தூக்கி போட்டார்.

    அதற்கு அஸ்வின் இல்லை... இல்லை... நீதான் ஐந்து விக்கெட் எடுத்தது. நீ சென்றால்தான் நன்றாக இருக்கும் என்று குல்தீப் யாதவிடமே பந்து மீண்டும் தூக்கிப் போட்டார். ஆனால் குல்தீப் யாதவ் நீங்கள்தான் செல்ல வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். அதற்கு அஸ்வின் உடன்படவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் பந்துடன் வெளியேறினார். இருவரின் இந்த தன்னலமற்ற வேண்டுகோளை ரசிகர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×