search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு
    X

    நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு

    • 4.5 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • தவான் 2 ரன்னிலும் சுப்மன் கில் 19 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இன்றைய போட்டியின் ஆடும் லெவனில் இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாமில்டன்,

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. முன்னதாக ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் -சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 4.5 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தவான் 2 ரன்னிலும் சுப்மன் கில் 19 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×