search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியது: ரஷித் கான்
    X

    நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியது: ரஷித் கான்

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்.

    மழையை நம்பாமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பவுலிங்கில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால் சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.

    இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும். தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×