என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
என்னது வைடா? பிஷ்னோயின் மிரட்டலால் முடிவை மாற்றிய நடுவர்: வைரலாகும் FUN வீடியோ
- 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
ஹராரே:
இந்தியா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 2-வது டி20 போட்டியின் போது கள நடுவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்த போது 8-வது ஓவரை பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை இடது கை பேட்ஸ்மேனான காம்ப்பெல் வலது பக்கம் திரும்பி அடிக்க முயற்சிப்பார். பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இதற்கு கள நடுவர் வைடு என அறிவிப்பார். உடனே பிஷ்னோய் வைடா என மிரட்டலாக கேட்க சுதாரித்து கொண்ட நடுவர் மன்னிக்கவும் என கூறி அறிவிப்பை மாற்றி விடுவார். இது களத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.