search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தனது குழந்தைகளுக்காக சிஎஸ்கே அணியிடம் உதவி கேட்ட அஸ்வின்
    X

    தனது குழந்தைகளுக்காக சிஎஸ்கே அணியிடம் உதவி கேட்ட அஸ்வின்

    • வருகிற 22-ந் தேதி சென்னையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த போட்டியின் டிக்கெட்டுகள் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட்டுக்கு டிமெண்ட் இருக்கிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் காண என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். உதவி செய்யுங்கள் சிஎஸ்கே நிர்வாகம்.

    என அஸ்வின் கூறியிருந்தார்.

    Next Story
    ×