என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆர்சிபி அணிக்கு சாதனை இலக்கு நிர்ணயித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
- ஆர்சிபி தரப்பில் ரீஸ் டாப்லே 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை விழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
39 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 41 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து கிளாசன் மற்றும் மார்க்ரம் தங்கள் பங்குக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசன் அரை சதம் விளாசினார். அவர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ரீஸ் டாப்லே 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை விழ்த்தினார்.